தேசியம்
செய்திகள்

தலைமைப் பதவி போட்டியில் வாக்களிக்க தகுதிபெற்ற 400,000 Liberal ஆதரவாளர்கள்!

Liberal தலைமைப் பதவிக்கான போட்டியில் வாக்களிக்க 400,000 ஆதரவாளர்கள் கட்சியின் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் நடைபெறுகிறது.

இந்த தலைமைப் பதவிக்கான போட்டியில் ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடுமையான போட்டி முன்னாள் கனடிய மத்திய வங்கி, இங்கிலாந்து மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த Mark Carney, முன்னாள் நிதியமைச்சரும் துணைப் பிரதமருமான Chrystia Freeland, முன்னாள் அரசாங்க சபை தலைவர் Karina Gould ஆகிய மூவருக்கும் இடையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் தவிரவும் Québec மாகாணத்தின் Pierrefonds-Dollard தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Frank Baylis, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Ruby Dhalla, ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இதில் 400,000 ஆதரவாளர்கள் காலக்கெடுவிற்கு முன்னர தலைமைப் போட்டியில் வாக்களிக்க உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளதாக கட்சி அறிவித்தது.

தலைமை வேட்பாளர்கள் ஆங்கிலம், பிரஞ்சு என் இரண்டு விவாதங்களில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர்.

இந்த விவாதம் இறுதி கட்டணம் செலுத்தும் காலக்கெடு முடிந்த February 17 க்கு  பின்னர் நடைபெறும்.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Lankathas Pathmanathan

Bell ஊடக வலைய பணி நீக்கங்கள் குறித்து பிரதமர் அதிருப்தி

Lankathas Pathmanathan

அமைச்சர்களுக்கான ஆணை கடிதங்களை வழங்கிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment