Liberal தலைமை பதவிக்கான வேட்பாளர்கள் சவாலான நிதி திரட்டும் மற்றொரு தடையை தாண்டி உள்ளனர்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் நடைபெறுகிறது.
இந்த தலைமைப் பதவிக்கான போட்டியில் ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர்களுக்கான பிரச்சாரக் குழுக்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை (07) எதிர்கொண்ட ஒரு பெரும் நிதி திரட்டும் தடையை கடந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.
இதனால் அவர்கள் அனைவரும் போட்டியில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் கட்சிக்கு வெள்ளியன்று செலுத்த வேண்டிய 125,000 டாலர்களை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தலைமை போட்டியின் மொத்த நுழைவுக் கட்டணமான 350,000 டாலர் கட்டணத்தின் ஒரு பகுதியாகும் .
இந்த நிலையில் தலைமை போட்டியாளர்கள் February 17 ஆம் திகதிக்குள் 125,000 டாலர்களை இறுதிக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.