காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனையை கனடிய அரசியல்வாதிகள் நிராகரிக்கின்றனர்.
இந்த பிரதேசத்தை சுத்தம் செய்து அமெரிக்காவிற்கு சொந்தமானதாக மாற்ற Donald Trump இந்த வாரம் பரிந்துரைத்தார்.
கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen , NDP தலைவர் Jagmeet Singh உட்பட பத்திற்கும் அதிகமான கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை நிராகரித்துள்ளனர்.
காசாவில் இருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீனர்கள் சிலரை கனடாவுக்கு அனுப்பலாம் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் கூறினார்.
காசாவில் இருந்து குடியிருப்பாளர்களை ஏற்றுக்கொள்ள கனடா முன்னர் விருப்பம் தெரிவித்தது என தெரிவித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Israel Katz, அவர்களை கனடா ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
கனடா ஏற்கனவே ஒரு “கட்டமைக்கப்பட்ட புலம்பெயர்வு திட்டத்தை” கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமையை கனடா ஆதரிக்கிறது என கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார்.
அதில் “காசாவில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்படக்கூடாது” என்பதும் அடங்கும் என்பதை அமைச்சர் குறிப்பிட்டார்.
காசா விவகாரத்தில் கனடாவின் நீண்டகால நிலைப்பாடு மாறவில்லை என் நினைவு படுத்திய Mélanie Joly, கனடா இரு மாநில அரசு தீர்வுக்கு அழைப்பு விடுக்கிறது என கூறினார்.