கனடா Post 50 மேலாண்மை ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
மோசமான நிதி நிலைமை காரணமாக இந்த பணி நீக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வார ஆரம்பத்தில் இந்த பணி நீக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நெருக்கடியான நிதி நிலைமையை நிர்வகிக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கனடா Post நிறுவனம் கூறுகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பாதிப்பேர் Ottawaவில் வேலை செய்தனர்.
ஏனையவர்கள் Torontoவிலும் பிற இடங்களிலும் வேலை செய்தனர்.
இந்த நடவடிக்கை கனடியர்களுக்கான தமது சேவையை பாதிக்காது என கனடா Post தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொழிலாளர் சங்கத்துடனான வேலை நிறுத்த பேச்சுவார்த்தைகளில் கனடா Post நிதி சவால்கள் ஒரு முக்கிய இழுபறியாக இருந்தது.
கனடா Post நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு அறிக்கை $313 மில்லியன் இழப்பைப் பதிவு செய்தது.
மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் தொடரும் இழப்புகளை கனடா Post எதிர்பார்கிறது.