கனடா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பின் மூலம் வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆரம்பித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை (04) முதல் அமுலுக்கு வரும் என கனடாவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் நாளில் கனடா மீது 25 சதவீத வரியை விதிக்கப் போவதாக November மாத இறுதியில் Donald Trump அறிவித்தார்.
ஆனால் பதவி ஏற்றவுடன் வரி விதிக்கப்படும் திகதியை February 1ஆம் திகதிக்கு அவர் மாற்றினார்.
சனிக்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரிகள் செவ்வாய் முதல் நடைமுறைக்கு வருகின்றன.’
இந்த வரி நடைமுறை fentanyl சவால் தீர்க்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது.
கனடா மீது அமெரிக்கா வரி விதிப்பதற்கு கனடாவின் பதில் குறித்து விவாதிக்க தனது அமைச்சர்களுடன் பிரதமர் சனி மாலை சந்தித்தார்.
பின்னர் அவர் கனடாவின் மாகாண முதல்வர்களை சந்திக்க ஏற்படாகியுள்ளது.
அமெரிக்காவின் நகர்வுக்கு எதிரான கனடிய அரசின் பதில் நடவடிக்கை குறித்து பிரதமர் Justin Trudeau, அரசாங்கங்களுக்கிடையேயான விவகார அமைச்சரும் நிதி அமைச்சருமான Dominic LeBlanc ஆகியோர் அறிவித்தல் ஒன்றை வெளியிடுவார்கள் என தெரியவருகிறது.
இந்த விடயத்தில் கனடிய அரசாங்கம் விரைவான பதில் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கனடாவின் மிகப்பெரிய தொழிற்சங்கம் கூறியுள்ளது.