தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபைத் தேர்தலில் குறைந்தது மூன்று தமிழ் வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள Ontario மாகாண சபைத் தேர்தலில் குறைந்தது மூன்று தமிழர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.

Ontario மாகாண சபை செவ்வாய்கிழமை (28) கலைக்கப்பட்டு  முன்கூட்டிய தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் Ontario PC கட்சியின் சார்பில் இருவரும், NDP வேட்பாளராக ஒருவரும் போட்டியிடுவது உறுதியாகின்றது.

இம்முறை Ontario PC கட்சியின் வேட்பாளர்களாக லோகன் கணபதி, விஜய் தணிகாசலம், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Markham–Thornhill தொகுதிக்கான Ontario PC கட்சியின் வேட்பாளராக லோகன் கணபதி November 28, 2024 கட்சியினால் உத்தியோக பூர்வமாக  அறிவிக்கப்பட்டார்.

Scarborough—Rouge Park தொகுதிக்கான Ontario PC கட்சியின் வேட்பாளராக விஜய் தணிகாசலம் December 11 2024 கட்சியினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் 2018  ஆம் ஆண்டு முதல் மாகாண சபை உறுப்பினராக உள்ளனர்.

இம்முறை Scarborough வடக்கு தொகுதியில் NDP வேட்பாளராக தட்ஷா நவநீதன் January 23 2024 நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற Scarborough – Guildwood தொகுதியின் Ontario மாகாண சபை இடைத் தேர்தலில் NDP வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.

Ontario மாகாண சபை தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

கனடிய பிரதமருக்கு ரஷ்யாவினால் தடை

Lankathas Pathmanathan

Stanley கோப்பை வெற்றியை தவற விட்ட Oilers

Lankathas Pathmanathan

கனடிய சுற்றுலாப் பயணியின் மரணம் கொடூரமானது: அயர்லாந்து பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment