தேசியம்
செய்திகள்

“Canada congratulates Donald Trump”: கனடிய தூதரகத்தில் புதிய அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தும் பதாகை

அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்புக்கு கனடா வழக்கத்திற்கு மாறான கொண்டாடத்தை இம்முறை நடத்துகிறது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்கிறார்.

பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க அவர் எச்சரித்து வருகின்றார்.

இந்த நிலையில் புதிய அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தும் வகையில் ஒரு பதாகை கனடிய தூதரகத்தின் வெளிப்புறத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.

“Canada congratulates Donald Trump” என அந்த பதாகை குறிப்பிடுகிறது.

பிரம்மாண்டமான Maple இலைக் கொடிகளால் சூழப்பட்ட கனடிய தூதரகத்தின் உச்சியில் இருந்த பதாகை உள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் நேரடியாக பங்கேற்பார் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட Alberta முதல்வர் Danielle Smith நிகழ்வில் பங்கேற்ற மாட்டார்  என தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பில் கனடிய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Donald Trump அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக கனடிய அரசியல் தலைவர்கள் பலர் Washington சென்றடைந்தனர்.

அமெரிக்கா சென்றுள்ள கனடிய அரசியல் தலைவர்களில் பலர் Washington நகரில் உள்ள கனடிய தூதரகத்தில் நடைபெறும் பதவியேற்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

Related posts

November மாதம் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan

தேர்தலில் வெளிநாட்டு அரசாங்கம் எனக்கு உதவவில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong

Lankathas Pathmanathan

Leave a Comment