நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரதமரின் நடவடிக்கைக்கான சட்ட சவாலை விரைவுபடுத்த நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
Liberal தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரதமர் Justin Trudeau, நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கும் முடிவை எடுத்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வுகள் March 24 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையும் வாய்ப்பை எதிர்கொள்ளாமல் விரைவான தலைமைத்துவ போட்டியை நடத்துவதற்கு Liberal கட்சிக்கு கால அவகாசம் வழங்குவதற்காக இந்த நாடாளுமன்ற ஒத்திவைப்பு அனுமதிக்கிறது.
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரதமர் Justin Trudeauவின் இந்த முடிவுக்கு எதிரான சட்ட சவாலை விரைவுபடுத்த நீதிமன்றம் சனிக்கிழமை (18) ஒப்புக் கொண்டுள்ளது.
காலக்கெடு குறித்த நீதிமன்றத்தின் வழக்கமான விதிகள் இந்த வழக்கிற்கு பொருந்தாது என மத்திய நீதிமன்ற தலைமை நீதிபதி Paul Crampton கூறினார்.
இதன் மூலம் February 13, 14 ஆம் திகதிகளில் இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த வழக்கை Nova Scotia குடியிருப்பாளர்கள் David MacKinnon, Aris Lavranos ஆகியோர் January 8 அன்று தாக்கல் செய்தனர்.
நாடாளுமன்ற அமர்வுகளை March 24 வரை ஒத்திவைக்க ஆளுநர் நாயகம் Mary Simonனுக்கு ஆலோசனை வழங்க பிரதமர் எடுத்த முடிவை இரத்து செய்ய வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படவில்லை என அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.