Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது குறித்த தனது முடிவை அமைச்சர் Francois-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (14) அறிவிக்கவுள்ளார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் Francois-Philippe Champagneபெயரும் அடங்கியுள்ளது.
இது குறித்த தனது முடிவை அவர் செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.