தேசியம்
செய்திகள்

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிடும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் Chandra Arya அறிவித்துள்ளார்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் Chandra Arya தனது பெயரையும் இணைத்துள்ளார்.

Nepean தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், இந்த தலைமை போட்டியில் தனது பெயரை அறிவித்த முதலாவது நாடாளுமன்ற உறுப்பினரானார்.

Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை கனடா மறுபரிசீலனை

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English Version Below)

thesiyam

சட்டப்பூர்வமாக வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க முயற்சி

Lankathas Pathmanathan

Leave a Comment