தேசியம்
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் அனிதா ஆனந்த்!

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் பெயரும் அடங்கியிருந்தது.

ஆனாலும் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை அமைச்சர் அனிதா ஆனந்த் சனிக்கிழமை அறிவித்தார்.

அடுத்த தேர்தலில் Oakville தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை எனவும் ஒரு அறிக்கையில் அமைச்சர்  கூறினார்.

அடுத்த தேர்தல் வரை தான் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பேன் எனவும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ள நிலையில் அவரது இந்த அறிக்கை வெளியானது.

Related posts

COVID: நாளாந்த தொற்று எண்ணிக்கை 60,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

New Brunswick கல்வி அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25

Lankathas Pathmanathan

Leave a Comment