வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்புகளின் பட்டியலை கனடிய அதிகாரிகள் தயாரித்து வருவதாக தெரியவருகிறது.
வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் பட்டியல் ஆவணம் ஒன்று கனடிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளிடையே புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து கனடிய பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என Donald Trump கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவில் வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்புகளின் பட்டியலை கனடிய அதிகாரிகள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.