Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாக இரண்டு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau இந்த வாரம் அறிவித்த நிலையில் புதிய தலைவருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இந்த போட்டியில் ஈடுபடுவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் Melanie Joly, இயற்கை வள அமைச்சர் Jonathan Wilkinson ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த விடயம் குறித்து ஆலோசித்து வருவதாக புதன்கிழமை நடைபெற்ற Liberal கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் இவர்கள் இருவரும் கூறினர்.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் நிதி அமைச்சர் Chrystia Freeland முன்னிலையில் உள்ளார்.
தவிரவும் கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carney, அமைச்சர்களான Mélanie Joly, Anita Anand, François-Philippe Champagne, Jonathan Wilkinson, முன்னாள் B.C. முதல்வர் Christy Clark உள்ளிட்டவர்களும் இந்த பதவியில் ஆர்வம் காட்டலாம் என கூறப்படுகிறது.
கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை புதனன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சர் Dominic LeBlanc அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.