Ontario முதல்வர் Doug Ford பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் முதல்வருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
புதன்கிழமை (08) நெடுஞ்சாலை 401 இல் Doug Ford பயணித்த OPP வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் தனக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என Doug Ford செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதியம் 12:40 மணியளவில் இந்த சம்பவம் நெடுந்தெரு 401 இல் Pickering நகரில் நிகழ்ந்தது.
இந்த வாகனத்தில் பயணித்த முதல்வர், ஊழியர்கள், OPP அதிகாரிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதல்வர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களை மோதிய வாகனத்தின் சாரதி உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.