Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது குறித்து Mark Carney தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.
Justin Trudeau பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அந்த பதவிக்கு போட்டியிடுவது குறித்து Mark Carney ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.
Justin Trudeauவுக்கு மாற்றாக அவரை கட்சியின் தலைமையில் கருதும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் Mark Carney உரையாடி வருவதாக தெரியவருகிறது.
Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன.
Justin Trudeau பதவி விலக வேண்டும் என Quebec, Atlantic, Ontario மாகாணங்களின் Liberal கட்சி நாடாளுமன்ற குழுக்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளன.
Mark Carneyயின் தலைமைத்துவ அபிலாசைகள் குறித்த ஊகங்கள் பல மாதங்களாக உள்ளன.
Mark Carney கனடிய மத்திய வங்கி, இங்கிலாந்து மத்திய வங்கி ஆகியவற்றின் முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.