முன்னாள் Liberal அமைச்சர் Marco Mendicino மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
முன்னாள் பொது பாதுகாப்பு, குடிவரவு அமைச்சர் Marco Mendicino அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஒரு அறிக்கையில் அறிவித்தார்.
2015 முதல் Toronto நகரில் Eglinton-Lawrence தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய Marco Mendicino அரசியலில் இருந்து விலகுவதற்கு இது சரியான நேரம் என கூறினார்.
ஆனாலும் நடப்பு நாடாளுமன்ற தொடரில் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசாங்கத்தின் தற்போதைய நிலையுடன் தான் உடன்படவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் அரசுடனான கனடாவின் மோசமடைந்த உறவுகள், காசாவில் மனிதாபிமான நெருக்கடியை கனடா தகுந்த முறையில் கையாளாகாதது, மத்திய கிழக்கில் கனடாவின் பலவீனமான நிலைப்பாடு ஆகியவற்றையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
யூத எதிர்ப்பு வாதத்தின் அலையை முகங்கொடுத்து வரும் சமூகத்தை அநியாயமாக இலக்கு வைப்பதை Marco Mendicino தொடர்ந்து வெளிப்படையாக கண்டித்து வருகிறார்.
அரசியல் கட்சிகளில் “மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமிருக்க வேண்டும்” எனவும் முன்னாள் அமைச்சரின் அறிக்கை குறிப்பிடுகிறது.
அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஆறு அமைச்சர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து Marco Mendicino அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
Justin Trudeauவின் தலைமை குறித்து பல மாத காலம் கேள்விகள் எழுந்த நிலை உள்ளது.