தமிழின அழிப்பை எதிர்கொண்ட தமிழர் சமூகம் இன்றும் நீதிக்காக காத்திருக்கும் சோக நிலை தொடர்வதாக Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.
தமிழ் மரபுத் திங்கள் குறித்து Pierre Poilievre அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தமிழ் மரபுரிமை மாதத்திலும் ஆண்டு முழுவதும், தமிழினப் படுகொலை குற்றங்களை இளைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தனது கட்சி உறுதியாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
January மாதம் முழுவதும் கனடிய தமிழ் பாரம்பரியத்தின் மூலம் பல தசாப்தங்களாக எங்கள் சமூகங்களை வளப்படுத்தி வரும் மக்களைக் கொண்டாடுகிறோம் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
கனடாவின் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் வடிவமைக்க உதவும் வகையில் கனடிய தமிழர்கள் வணிகங்கள், கலாச்சார அமைப்புகளை நிறுவியுள்ளனர் என Pierre Poilievre தனது தமிழ் மரபுத் திங்கள் செய்தியில் தெரிவித்தார்.
இந்த மாதத்தில் கொண்டாடும் தமிழர் கலாச்சாரத்திற்கு எப்போதும் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என கூறிய Conservative தலைவர், தமிழினப் படுகொலையின் கொடூர சம்பவங்களில் இது மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது என குறிப்பிட்டார்.
கனடிய தமிழர் சமூகத்தை கொண்டாடுவதில் Conservative கட்சி எப்போதும் பெருமை அடையும் என அவர் தெரிவித்தார்.