Justin Trudeau பதவி விலக வேண்டும் என Liberal கட்சியின் Atlantic நாடாளுமன்ற குழு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமரின் தலைமை குறித்து பல மாத காலம் கேள்விகள் எழுந்த நிலை உள்ளது.
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் பிரதமரின் தலைமை மேலும் உறுதியற்றதாகி உள்ளது.
Liberal கட்சியின் Atlantic நாடாளுமன்ற குழு கடந்த திங்கட்கிழமை (23) சந்தித்தது.
இந்த சந்திப்பை தொடர்ந்து Atlantic நாடாளுமன்ற குழு தலைவர் Kody Blois பிரதமர் Justin Trudeau க்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
பிரதமர் Justin Trudeau கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என Atlantic நாடாளுமன்ற குழு இந்த கடித்ததில் கோரினார்.
“இந்த சந்திப்பு கட்சியின் தலைவர் பதவியை நீங்கள் விலக வேண்டியதன் அவசியத்தையும், உங்களுக்கு பதிலாக ஒரு புதிய தலைவரை தீர்மானிப்பதற்கான செயல்முறையை அவசரமாக அனுமதிக்க வேண்டும் என்பதையும் மையமாகக் கொண்டது” என Kody Blois இந்த கடித்ததில் குறிப்பிட்டார்.
தலைமைத்துவ மாற்றம் ‘அவசரமானது’ என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்த கடிதத்தின் பிரதி ஒன்றை New Brunswick Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Wayne Long சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.