தேசியம்
செய்திகள்

Liberal கட்சியிடம் இருந்து விலகி நிற்க NDP தயார்?

Liberal கட்சியிடம் இருந்து விலகி நிற்கவும் அடுத்த தேர்தலில் Conservative கட்சியை எதிர்கொள்ளவும் NDP தயாராகி வருகிறது.

பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை அரசாங்கத்திற்கு NDP ஆதரவு வழங்குவதன் மூலம் 2024 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

Justin Trudeau பதவி விலக வேண்டும் என Jagmeet Singh கோரிக்கை விடுத்தது மூலம் இந்த ஆண்டு நிறைவடைகிறது.

நிதி அமைச்சர் பதவியில் இருந்து Chrystia Freeland விலகிய பின்னர் Liberal அரசாங்கத்துடனான தனது கூட்டணியை மட்டுப்படுத்துவதற்கான Jagmeet Singhகின் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது.

இது Liberal அரசாங்கத்தை இன்னும் அரசியல் குழப்பத்தில் மூழ்கடித்து, Justin Trudeau நீண்ட காலம் பிரதமராக நீடிக்க முடியுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது.

ஆனால் அரசாங்கத்தை தோற்கடித்து தேர்தலைத் தூண்டுவதற்கு தனது கட்சி Conservative, Bloc Québécois கட்சிகடன் எப்போது இணைந்து வாக்களிக்கும் என்பதற்கு Jagmeet Singh இதுவரை எந்தவிதமான காலக்கெடுவையும் முன்வைக்கவில்லை.

Related posts

Ontario அரசின் தனியார் பராமரிப்பு முதலீட்டு திட்டம்

Lankathas Pathmanathan

Montreal, Quebec City நகர முதல்வர்கள் திறமையற்றவர்கள்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலைக்கு சாத்தியம்?

Gaya Raja

Leave a Comment