December 28, 2024
தேசியம்
செய்திகள்

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாகுமா Bloc Québécois?

அடுத்த பொதுத் தேர்தலில் Bloc Québécois கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாவது குறித்த சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.

இந்த சாத்தியக்கூறுகள் குறித்து Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கருத்து தெரிவித்தார்.

Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை Liberal அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது.

தொடர் கருத்துக்கணிப்புகள் Liberal கட்சியின் ஆதரவு வாக்குகளின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலையில் Quebec வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தான் கவனம் செலுத்தி வருவதாக Yves-François Blanchet தெரிவித்தார்.

இன்று தேர்தல் ஒன்று நடைபெற்றால் Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி 232 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என் அண்மைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் 45 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக அமையும் எனவும் அந்த கருத்து கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

Liberal 39, NDP 25, பசுமை கட்சி 2 என அந்த தேர்தல் முடிவு அமையும் எனவும் குறிப்பிட்ட கருத்து கணிப்பு கூறுகிறது.

அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால், முடியாட்சிக்கு எதிரான, Quebec மாகணத்தை மையமாகக் கொண்ட இறையாண்மை வாதக் கட்சியான Bloc Québécois கனடாவின் எதிர்க்கட்சியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bloc Québécois இதற்கு முன்னர் ஒரே ஒரு முறை, 1993 இல் மட்டுமே உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியை அமைத்தது.

Related posts

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

Lankathas Pathmanathan

Toronto துணை நகர முதல்வர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கான உறுதியான சர்வதேச ஆதரவால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment