வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
Markham நகரில் இடம்பெற்ற வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Markham நகரில் இடம்பெற்ற ஆயுதமேந்திய வாகன திருட்டு சம்பவம் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட York பிராந்திய காவல்துறையின் புலனாய்வாளர்கள் இந்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர் .
இந்த விசாரணையில் ஒரு தொகை போதை பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர்கள் Pickering நகரை சேர்ந்த 34 வயதான சுவேஸ்தன் கணேசமூர்த்தி, Brampton நகரை சேர்ந்த 29 வயதான அருண்ஷியா அருளானந்தம் என அடையாளம் காணப்பட்டனர் .
இவர்களுக்கு எதிராக மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
November 5, 2024 அன்று Markham நகரில் நிகழ்ந்த வாகன திருட்டு குறித்து ஆரம்பிக்கப்பட விசாரணையின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
கைதானவர்களின் படங்களை வெளியிட்டுள்ள York பிராந்திய காவல்துறையினர், அவர்கள் வாகன திருட்டு கொள்ளைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்புகின்றனர்.
இந்த விசாரணை தொடரும் நிலையில், புலனாய்வாளர்கள் மேலதிக சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த விபரமறிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு புலனாய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.