கனடிய அரசாங்கம் புதிய எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது.
அமைச்சர்கள் Dominic LeBlanc, Marc Miller, Mary Ng, Ya’ara Saks ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை செவ்வாய்கிழமை வெளியிட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trump முன்வைத்துள்ள வரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
எல்லை பாதுகாப்பை அதிகரிக்க ஐந்து மட்ட அணுகுமுறையை அரசாங்கம் வகுத்துள்ளது.
இதற்காக இலையுதிர் கால பொருளாதார அறிக்கையில் 1.3 பில்லியன் டாலர் நிதி அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த நிதி எங்கு, எப்படி ஒதுக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இந்த அறிவித்தலில் உள்ளடக்கப்படவில்லை.
எல்லை பாதுகாப்பு, எல்லை ஒருமைப்பாடு குறித்த கவலையை பகிர்ந்து கொள்கிறோம் என்பதை கனடியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் காண்பிப்பதற்கான ஒரு முக்கியமான படி இதுவாகும் என அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.
எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்கள் பல மாதங்களாக நடந்து வருகின்றன எஎனவும் அவர் தெரிவித்தார்.