தேசியம்
செய்திகள்

வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser பதவி விலகினார்

மூத்த அமைச்சர் Sean Fraser தனது பதவியில் இருந்து விலகுவதாக  அறிவித்தார்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் Sean Fraser மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என திங்கட்கிழமை (16) அறிவித்தார்.

குடும்ப காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அறிவித்துள்ள அதே தினம் Sean Fraser பதவி விலகல் அறிவித்தலும் வெளியானது.

இதன் மூலம் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தவர்களின் பட்டியலில் Sean Fraser இணைந்து கொள்கிறார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிடாத Liberal அமைச்சர்களை மாற்ற விரைவில் அமைச்சரவை மாற்றம் ஒன்று வெளிவரவுள்ளதாக வதந்திகள் வெளியான நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

கனடாவின் வருடாந்த பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

Lankathas Pathmanathan

Beijing ஒலிம்பிக்கில் கனடாவுக்கு இரண்டாவது பதக்கம்

Lankathas Pathmanathan

அடுத்த வாரம் Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முதல் வாய்ப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment