சீனா, ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக கனடா புதிய தடைகளை அறிவிக்கிறது.
கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை இந்த தடை அறிவித்தலை வெளியிட்டது.
கடந்த கால, நிகழ்கால மூத்த சீன அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகள், அவர்களின் ஒத்துழைப்பாளர்கள் என பலரும் இந்த புதிய மனித உரிமைகள் தடைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
இந்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டவர்கல், “கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள்” என கூறப்படும் எட்டு சீனர்கள் அடங்குகின்றனர்.
இந்த பொருளாதாரத் தடைகள் சீனாவில் இன, மத சிறுபான்மையினர் மீதான சீன அரசாங்கம் தலைமையிலான ஒடுக்குமுறைக்கு பதிலளிக்கின்றன என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.