Scarborough நகரில் சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட ஒரு விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான இருவரும் Toronto நகரை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா, 37 வயதான கிஷனி பாலச்சந்திரன் என தெரியவருகிறது.
இந்த விசாரணை குறித்து Toronto காவல்துறை பொதுமக்களுக்கு தகவல் வெளியிட்டது.
இவர்கள் இருவரும் December 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக 13க்கு எதிரான குற்றசாட்டுகள் பதிவாகின.
இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை