தேசியம்
செய்திகள்

கனடிய பொருட்கள் மீதான அமெரிக்க வரி எச்சரிக்கை தீவிரமானது: Justin Trudeau

அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கனடிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என Donald Trump முன்வைத்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கனடிய பிரதமர் Justin Trudeau கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து கனடிய பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என Donald Trump கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு கனடா முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விடயத்தில் கனடிய வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட வரி அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் “கனடா குழு அணுகுமுறை – Team Canada approach” அவசியமானது என  கனடிய பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என  தொழில்துறை அமைச்சர் François-Philippe Champagne கூறினார்.
இந்த விடயத்தில் அமெரிக்காவுடன் விவாதிக்க தேவையான அவகாசம் உள்ளது என அவர் கூறினார்.
இந்த நிலையில் அமெரிக்க-கனடா உறவுகள் குறித்து கலந்துரையாட மாகாண, பிராந்திய முதல்வர்களுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை பிரதமர்  Justin Trudeau நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளையும் தனிமைப்படுத்தல் விதிகளையும் தளர்த்துவது சாத்தியம்: பிரதமர்

Gaya Raja

அனைத்துலக தமிழர் பேரவை: கனடாவில் அறிமுகமாகும் புதிய அமைப்பு

Lankathas Pathmanathan

Quebec புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment