Toronto பெரும்பாகத்தை அண்மித்த வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா விடுத்துள்ளது.
Torontoவின் வடக்கே உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை – 28 – இரவு முதல் பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கை Bracebridge, Gravenhurst, Huntsville, Haliburton, Owen Sound, Tobermory உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் உள்ளது.
இந்த பகுதிகளில் வெள்ளிக்கிழமைக்குள் – 29 – 30 cm வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைக்குள் – 30 – 50 cm வரை பனிப்பொழிவு பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் Torontoவில் சிறிய அளவில் பனி தூரல் சாத்தியமாகும் என கூறப்படுகிறது.
ஆனால் இது குறிப்பிடத்தக்க அளவிலான பனிப்பொழிவாக இருக்கும் என எதிர்பார்க்கப் படவில்லை.