தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமரும் மாகாண முதல்வர்களும் சந்திப்பு

கனடிய பிரதமருக்கும் 13 மாகாண முதல்வர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கனடிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என Donald Trump அண்மையில் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் மாகாண, பிராந்திய முதல்வர்களை பிரதமர் Justin Trudeau புதன்கிழமை – 27 – சந்தித்தார்.

Donald Trumpபின் எச்சரிக்கை வெளியான இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கனடாவுக்கு ஆதரவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc இந்த சந்திப்பின் பின்னர் வலியுறுத்தினார்.

மத்திய அரசாங்கம் செயலூக்கமான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என Ontario முதல்வர் Doug Ford இந்த சந்திப்பின் பின்னர் கூறினார்.

இந்த சந்திப்பு மத்திய அரசாங்கத்திடம் இருந்து மிகவும் செயல்திறன் மிக்க அணுகுமுறையின் ஆரம்பம் என அவர் தெரிவித்தார்.

கனடாவின் முதல்வர்களின் தலைவராக Doug Ford உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Austria அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

இலங்கை அரசின் தடை பட்டியலில் 2 கனேடிய தமிழ் அமைப்புகளும் 47 கனேடிய தமிழர்களும்!

Gaya Raja

Leave a Comment