Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என தொழிலாளர் அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் சுமார் இரண்டு வாரங்களாக தொடர்கிறது.
தொழிற்சங்கத்திக்கும், Canada Post நிர்வாகத்திற்கும் இடையிலான பேச்சுக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என தொழிலாளர் அமைச்சர் Steven MacKinnon தெரிவித்தார்.
இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவ நியமிக்கப்பட்ட மத்திய அரசின் சிறப்பு மத்தியஸ்தர் தனது மத்தியஸ்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அவர் கூறினார்.
மத்தியஸ்த நடவடிக்கைகளின் இடைநிறுத்தம், இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய உதவும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டு தரப்பினரையும் தனது அலுவலகத்தில் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
தொடரும் வேலை நிறுத்தத்தில் ஒரு தீர்வைக் காண்பதற்கு இரு தரப்பினர் மட்டுமே பொறுப்பு என இந்த சந்திப்பில் அவர்களிடம் கூற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக 10 மில்லியனுக்கும் அதிகமான விநியோகங்கள் தவற விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.