தேசியம்
செய்திகள்

கனடா முழுவதும் நினைவு தினம்

முன்னாள் இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் கனடா முழுவதும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

November 11ஆம் திகதி கனடாவில் நினைவு – Remembrance – தினமாகும்.

தலைநகர் Ottawaவில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் பிரதமர், ஆளுநர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

நினைவு தினத்தில் தேசத்திற்கு சேவை செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு பாரம்பரியம் மட்டுமல்ல, ஒரு கடமையும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

கனடிய படைகளில் இன்றும் தொடர்ந்து சேவையாற்றும் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கும் இந்த விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போதைய ஓய்வு பெற்ற கனடிய போர் வீரர்களின் எண்ணிக்கை 7,300 பேர் என படைவீரர் விவகார அமைச்சு – Veterans Affairs கனடா – மதிப்பிடுகிறது.

 

Related posts

பசுமை கட்சியின் தலைமைப் போட்டியில் Elizabeth May

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு தயாராகும் கனடா!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணைக்கு புலம்பெயர் குழுக்கள் அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment