கனடா-அமெரிக்க உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவைக் குழுவை புதுப்பிக்க கனடிய பிரதமர் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக Donald Trump இந்த வாரம் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கனடா-அமெரிக்க உறவுகளின் அமைச்சரவைக் குழுவை புதுப்பிக்கும் முடிவை கனடிய பிரதமர் Justin Trudeau எடுத்துள்ளார்.
முக்கியமான கனடா-அமெரிக்க பிரச்சனைகள் குறித்து இந்தக் குழு கவனம் செலுத்தும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland இந்த குழுவின் தலைவராக இருப்பார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc குழுவின் துணைத் தலைவராகவும் செயல்படுவார்.
சிறப்புக் குழுவில் உள்ள ஏனைய அமைச்சர்கள்:
- வெளியுறவு அமைச்சர் Melanie Joly;
- பாதுகாப்பு அமைச்சர் Bill Blair;
- குடிவரவு அமைச்சர் Marc Miller;
- சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng;
- அவசர தயார் நிலை அமைச்சர் Harjit Sajjan;
- போக்குவரத்து துறை அமைச்சர் அனிதா ஆனந்த்;
- விவசாய அமைச்சர் Lawrence MacAulay;
- இயற்கை வளத்துறை அமைச்சர் Jonathan Wilkinson;
- அமைச்சர் Francois-Philippe Champagne.