December 12, 2024
தேசியம்
செய்திகள்

புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் வாழ்த்து

புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trumpக்கு கனடிய  பிரதமர் Justin Trudeau வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக Donald Trump வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கான தனது வாழ்த்து செய்தியில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு குறித்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயல்பட தயாராகவுள்ளதாகவும் Justin Trudeau தனது X தளத்தில்  கூறினார்.

தவிரவும் Justin Trudeau அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்கல் பலரும் Donald Trumpக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Justin Trudeau, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump உடன் புதன்கிழமை (06) இரவு தொலைபேசி உரையாடியதாக பிரதமர்  அலுவலகம் உறுதிப்படுத்தியது.

இருவரும் கனடா-அமெரிக்க உறவு, வர்த்தகம், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) ஆகியவை குறித்து உரையாடினர்.

Donald Trumpக்கு Conservative தலைவர் Pierre Poilievre உம் வாழ்த்து தெரிவித்தார்.

Related posts

15 வயது சிறுவன் RCMP அதிகாரிகளால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

ஆறு மாதங்களில் பயணத்திற்காக $14.6 மில்லியன் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Lankathas Pathmanathan

Toronto நகர சபை உறுப்பினராக பதவியேற்ற தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment