தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்க சிறந்த நிலையில் உள்ளோம்: அமைச்சர் Melanie Joly

அடுத்த அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்க சிறந்த நிலையில் கனடிய அரசாங்கம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்தக் கருத்தை தெரிவித்தார்.
அடுத்த அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு தயாரிப்பு நடவடிக்கை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
இறுதியாக அமெரிக்கா, மெக்சிகோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை விட, அடுத்த அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்க சிறந்த நிலையில் கனடா உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கனடிய பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு வாத கொள்கை அடிப்படையில் இரண்டு ஜனாதிபதி வேட்பார்களும் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.
கடந்த தசாப்தத்தில் மூன்று வெவ்வேறு அமெரிக்க நிர்வாகங்களை கையாண்ட பின்னர், Justin Trudeau அரசாங்கம் இந்த விடயத்தில் அனுபவத்தைப் பெற்றுள்ளது என Melanie Joly கூறினார்.
இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும்  அதற்கு தயாராகும் வகையில் கனடிய அரசாங்கம் குடியரசு, ஜனநாயகக் கட்சியினருடன் உறவுகளை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

2020 முதல் மோசடி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு: RCMP

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் Patrick Brown

Lankathas Pathmanathan

பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரவுள்ள கனேடிய அரசும் இராணுவமும்

Lankathas Pathmanathan

Leave a Comment