December 12, 2024
தேசியம்
செய்திகள்

Torontoவில் தமிழர்களின் திரையரங்கில் தீ?

Torontoவில் தமிழர்களின் திரையரங்கில் தீ விபத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (01) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் McCowan Road – Finch Avenue East சந்திப்பில் உள்ள Woodside திரையரங்கில் நிகழ்ந்தது.

இரண்டு சந்தேக நபர்கள் தெரியாத பொதி ஒன்றை கொளுத்தியதை அடுத்து திரையரங்கத்தில் இருந்தவர்கள்  வெளியேற்றப்பட்டனர்.

திரையரங்கின் முன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இரண்டு சந்தேக நபர்கள் திரையரங்கிற்குள் நுழைந்து தெரியாத பொதி ஒன்றை கொளுத்தியதால், அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்கில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ அணைக்கப்பட்டதாகவும், இதில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமது வெடி பொருட்களை அகற்றும் பிரிவினர் அடையாளம் காணப்படாத பொதியை அகற்றுவதற்காக திரையரங்கத்திற்கு அழைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் பட்டாசு எச்சங்கள் இருந்ததற்கான ஆதாரங்களை விசாரணையாளர்கள் கண்டறிந்தனர் என Toronto  தீயணைப்பு பிரிவினர் கூறினார்.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

Ontarioவில் 4,800க்கும் அதிகமான தொற்றுகள் வெள்ளிக்கிழமை பதிவு!

Gaya Raja

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார்: பிரதமர்

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment