தேசியம்
செய்திகள்

வாகன திருட்டு விசாரணையில் 59 சந்தேக நபர்கள் கைது – 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு

வாகன திருட்டு விசாரணையில் 59 சந்தேக நபர்களை Toronto காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் 300க்கும் மேற்பட்ட திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன.

கைதானவர்கள் மொத்தம் 300க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Project Thoroughbred என பெயரிடப்பட்ட விசாரணையின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (01) அறிவிக்கப்பட்டன.

இந்த விசாரணை July மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் 14 மில்லியன் டொலர் மதிப்புள்ள 363 திருடப்பட்ட வாகனங்கள் மீட்டெடுக்கப்பட்டது.

ServiceOntario  ஊழியர்கள் போலி வாகன அடையாள எண்களை (Vehicle Identification Numbers -VIN) முறையற்ற உரிமத் தகடுகளுக்குப் பதிவு செய்தது இந்த விசாரணையில் புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

முக்கிய வட்டி விகிதம் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும்

Lankathas Pathmanathan

Paris Olympics: ஆறாவது பதக்கம் வென்ற கனடா!

Lankathas Pathmanathan

CNE இந்த வாரம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment