February 21, 2025
தேசியம்
செய்திகள்

அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவப் போவதில்லை: Jagmeet Singh

Liberal அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு Bloc Québécois, Conservative கட்சிகளுக்கு உதவப் போவதில்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

Liberal அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு  Bloc Québécois  Conservative கட்சிகளின்  தலைவர்களின் கோரிக்கைகளுக்கு தனது நாடாளுமன்ற குழு அடிபணியாது என அவர் கூறினார்.

சிறுபான்மை Liberal அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயாராகவுள்ளதாக Yves-François Blanchet செவ்வாய்கிழமை (29) தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு Bloc Québécois, Conservative கடசிகளுக்கு NDPயின் உதவி தேவையாகும்.

ஆனாலும் அவர்களுக்கு உதவ NDP தலைவர் Jagmeet Singh மறுத்துள்ளார்.

நாடாளுமன்ற வாக்களிப்பில் NDPயின் ஆதரவு சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு சட்ட மூலங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை Conservative கட்சிக்கு உதவுவதாக Bloc Québécois மீது அவர் குற்றம் சாட்டினார்.

Related posts

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

Gaya Raja

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment