தேசியம்
செய்திகள்

Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை புதன்கிழமை (30) சமர்பிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் Peter Bethlenfalvy இந்த பொருளாதார அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

இந்த பொருளாதார அறிக்கை ஒரு சிறிய வரவு செலவு திட்டமாக நோக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைகள், மருத்துவமனைகள், வீடுகள் கட்டமைக்கும் தனது அரசாங்கத்தின் ஒரு இலட்சிய திட்டமாக இந்த பொருளாதார அறிக்கை அமையும் என முதல்வர் Doug Ford எதிர்வு கூறியுள்ளார்.

இந்தப் பொருளாதார அறிக்கையில் இருந்து இரண்டு முக்கிய அறிவித்தல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

கடந்த இலை துளிர் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட Doug Ford அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் 2026-27 ஆண்டு வரை பற்றாக்குறை கணிக்கப்பட்டது.

இந்தப் பற்றாக்குறை தற்போதைய 2024-25 ஆண்டில் 9.8 பில்லியன் டொலராக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அரசியலில் இருந்து விலகும் அமைச்சர் Rod Phillips

Lankathas Pathmanathan

September வரை பாடசாலைகளை மூடி வைப்பது குறித்து Ontario ஆலோசிக்கிறது

Gaya Raja

நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் புதிய இலக்கு

Lankathas Pathmanathan

Leave a Comment