British Columbia மாகாண தேர்தலில் NDP கட்சி பெரும்பான்மை பெறும் நிலை தோன்றியுள்ளது.
October 19 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை தேர்தல் இறுதி முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.
பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க தேவையான 47 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில் தேர்தல் முடிவுகள் உள்ளன.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளை அடிப்படையில் NDP 46 தொகுதிகளிலும், Conservative 45 தொகுதிகளிலும், BC பசுமை கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
தொடரும் வாக்குகளின் எண்ணிக்கை ஒரு பிரதான தொகுதியில் Conservative கட்சியை விட NDP கட்சியை முன்னிலைப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் NDP கட்சிக்கு குறுகிய பெரும்பான்மை கிடைக்கும் சாதித்திய கூறு தோன்றியுள்ளது.
இந்தத் தேர்தலில் எண்ணப்படாத சுமார் 50,000 வாக்குகள் திங்கட்கிழமை (28) முதல் எண்ணப்படுகிறது