Nova Scotia மாகாணத்தில் முன்கூட்டிய தேர்தல் அழைப்பு விடுக்கப்பட்டது.
முதல்வர் Tim Houston இந்த தேர்தலுக்கான அழைப்பை விடுத்தார்.
இதன் மூலம் மாகாண தேர்தல் வாக்களிப்பு November 26 ஆம் திகதி நடைபெறுகிறது.
Progressive Conservative தலைவர் Tim Houston இரண்டாவது முறையாக வெற்றி பெரும் முயற்சியில் இந்த தேர்தலை அறிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அறிமுகப்படுத்திய நிலையான தேர்தல் திகதி சட்டத்தை மீறும் வகையில் இந்த தேர்தல் அறிவித்தல் வெளியானது.
மூன்று கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.
55 ஆசனங்களை கொண்ட மாகாண சபையில், தேர்தல் அறிவித்தலுக்கு முன்னர் Progressive Conservative கட்சி 34 ஆசனங்களையும், Liberal கட்சி 14 ஆசனங்களையும், NDP 6 ஆசனங்களையும் கொண்டிருந்தது.
மாகாண சபையில் ஒரு சுயேச்சை உறுப்பினரும் இருந்தார்.
2022இல் Liberal கட்சியின் தலைமையை வென்ற Zach Churchill தனது முதல் தேர்தலை எதிர்கொள்கிறார்.
அதேபோல் 2022இல் NDP தலைமையை வென்ற Claudia Chender தனது முதல் தேர்தலை எதிர்கொள்கிறார்.