தேசியம்
செய்திகள்

N.B. மாகாணத்தில் முதல் தடவையாக பெண் முதல்வர்!

New Brunswick மாகாணத்தில் முதல் தடவையாக பெண் ஒருவர் முதல்வராகிறார்.

New Brunswick மாகாண சபை தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெற்றது.

49 தொகுதிகளை கொண்ட இந்தத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (21) நடைபெற்றது.

61ஆவது மாகாண சபை தேர்தல் Liberal கட்சி பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி பெற்றது.

31 தொகுதிகளில் Liberal கட்சி, 16 தொகுதிகளில் Progressive Conservatives கட்சி,  2 தொகுதிகளில் பசுமைக் கட்சி வெற்றி பெற்றது.

Susan Holt தலைமையிலான Liberal கட்சிக்கும், Blaine Higgs தலைமயிலான Progressive Conservatives கட்சிக்கும் இடையிலான போட்டியாக இந்தத் தேர்தல் அமைந்தது.

Susan Holt இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மாகாணத்தின் முதலாவது பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.

Progressive Conservatives கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் எண்ணத்தில் இந்தத் தேர்தலை எதிர்கொண்டது.

Fredericton South-Silverwood தொகுதியில் Liberal கட்சியின் தலைவர் Susan Holt வெற்றி பெற்றார்.

2010 முதல் மாகாண சபை உறுப்பினராக இருந்த Progressive Conservatives கட்சி தலைவர் Blaine Higgs, தனது Quispamsis தொகுதியில் தோல்வி அடைந்தார்.

இந்த தோல்வியின் பின்னணியில் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகும் முடிவையும் அவர் எடுத்துள்ளார்

பசுமை கட்சியின் தலைவர்  David Coon தனது Fredericton-Lincoln தொகுதியில் வெற்றி அடைந்தார்.

மொத்திம் 17 பெண்கள் இம்முறை மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்

இந்தத் தேர்தலில் வெற்றியடைந்த Susan Holt க்கு பிரதமர் Justin Trudeau வாழ்த்து தெரிவித்தார்.

Related posts

Ontario பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு நகர்கிறது!

Gaya Raja

இரண்டு Alberta அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை

Lankathas Pathmanathan

கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள் !

Lankathas Pathmanathan

Leave a Comment