சில தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளது.
தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு அமைச்சர் Randy Boissonnault இது குறித்த அறிவித்தலை வெளியிடவுளார்.
அதிக ஊதியத்தில் கனடிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளை ஊக்குவிக்கும் ஒரு வழிமுறையாக இந்த நகர்வு அமைகிறது.
மாகாண சராசரி ஊதியத்தை விட 20 சதவீதம் இந்த அதிகரிப்பு அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.
இந்த மாற்றம் November 8 முதல் அமுலுக்கு வர உள்ளது.
இந்த மாற்றம் 34,000 தொழிலாளர்களை பாதிக்கும் என அரச அதிகாரி மதிப்பிட்டுள்ளனர் .
கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக Liberal அரசாங்கம் விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளது.
183,820 தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் அனுமதிகள் 2023 இல் நடைமுறைக்கு வந்தன.
இந்த எண்ணிக்கை 2019 இல் 98,025 ஆக இருந்தது என குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சின் தரவுகள் கூறுகின்றன.