February 22, 2025
தேசியம்
செய்திகள்

சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க வன்முறை கும்பல்களை பயன்படுத்தவில்லை: கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய மறுப்பு

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க வன்முறை கும்பல்களை பயன்படுத்துவது குறித்த கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் மீண்டும் மறுத்துள்ளது.

கனடாவில் உள்ள இந்தியாவை தளமாகக் கொண்ட வன்முறை கும்பல்களுடன் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க இந்தியா ஒத்துழைக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Randhir Jaiswal தெரிவித்தார்.

கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளை இந்தியாவிற்கு நாடு கடத்தும் இந்தியாவின் முயற்சிகளை கனடிய அதிகாரிகள் எதிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளை இந்திய தூதர்கள் குறிவைப்பதாக கனடிய பிரதமர் Justin Trudeau, RCMP அதிகாரிகள் இந்த வாரம் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான நெருக்கடியில் இரு நாடுகளும் உயர்மட்ட இராஜதந்திரிகளை இந்த வாரம் வெளியேற்ற உத்தரவிட்டது.

சீக்கிய ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கனடா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை எனவும் Randhir Jaiswal வியாழக்கிழமை (17) கூறினார்.

ஆனாலும் RCMP புலனாய்வாளர்கள் தனிப்பட்ட முறையில் இந்திய அதிகாரிகளுடன் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் என இந்த வாரம் JustinT rudeau கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் கனடாவில் வசிக்கும் சீக்கியர்கள் மீது கனடா நடவடிக்கை எடுக்கவில்லை என Randhir Jaiswal குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் 26 நாடு கடத்துதல் கோரிக்கைகள் கனடாவில் ஒரு தசாப்தம் அல்லது அதற்கும் மேலாக நிலுவையில் இருப்பதாக அவர் கூறினார்.

Related posts

எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த பேச்சுக்கள் ஆரம்பம்!

Gaya Raja

RCMP இடைக்கால ஆணையராக Mike Duheme நியமனம்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பதினொரு பதக்கங்கள் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment