தேசியம்
செய்திகள்

கனடாவின் சட்ட நடைமுறைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து அழைப்பு

கனடாவின் சட்ட நடைமுறைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தக் கருத்தை இங்கிலாந்து தெரிவித்தது.

கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP அண்மையில் குற்றம் சாட்டியது.

இந்த விடயத்தில் கனடாவின் நீதி விசாரணைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தகுந்த நகர்வாகும் என இங்கிலாந்து தெரிவித்தது.

இங்கிலாந்து வெளியுறவு Commonwealth மேம்பாட்டு அலுவலகம் இந்த இராஜதந்திர உறவு நிலை குறித்து ஒரு அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது.

“கனடாவில் சுயாதீன விசாரணைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தீவிர குற்றச்சாட்டுகள் குறித்து கனடிய அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளோம்” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இறையாண்மைக்கான அவசியத்தை வலியுறுத்தும் இந்த அறிக்கை, கனடாவின் நீதித்துறையில் இங்கிலாந்துக்கு முழு நம்பிக்கை உள்ளது என்பதை குறிப்பிடுகிறது.

இங்கிலாந்து பிரதமர் Keir Starmer கனடிய பிரதமர் Justin Trudeau ஆகியோர் இடையேயான இந்த விடயம் குறித்த தொலைபேசி உரையாடல் ஒன்று திங்கட்கிழமை மாலை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Maple Leafs அணித் தலைவராக பெயரிடப்பட்ட Auston Matthews

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-காசா போர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் Ontario MPP

Lankathas Pathmanathan

Pfizer தடுப்பூசிகளை வழங்கி உதவுங்கள்: அமெரிக்காவிடம் கனடா கையேந்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment