கனடாவில் நிகழும் குற்றங்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார்.
இந்திய அரசாங்க முகவர்கள் கனடாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக RCMP கூறுகிறது.
கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP குற்றம் சாட்டுகிறது.
இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் அடிப்படையில் தவறிழைத்துள்ளது என பிரதமர் கூறினார்.
கனடிய மண்ணில் கனடியர்களுக்கு எதிரான வன்முறை பிரச்சாரத்தை இந்தியா ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
கனடாவில் குற்றச் செயல்களில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டதாகக் வெளியாகும் புதிய குற்றச்சாட்டுகளை “கனடாவின் இறையாண்மைக்கு எதிரான விதி மீறல்” என Justin Trudeau கூறினார்.
சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டும் எந்த ஒரு ஜனநாயக நாடும், அதன் இறையாண்மையின் அடிப்படை மீறலை ஏற்றுக்கொள்ளாது என பிரதமர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு கனடிய தேர்தல்களில் இந்தியா தலையிட்டதற்கான ஆதாரம் வெளிநாட்டு தலையீடு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் ஏற்கனவே கிடைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.