December 12, 2024
தேசியம்
செய்திகள்

Pharmacare ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிரதமர் அழைப்பு

Pharmacare ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க மாகாணங்கள், பிரதேசங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது சட்டமாகியுள்ள நிலையில் பிரதமர் Justin Trudeau இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டை நிறைவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் உரையாடிய பிரதமர் இந்த அழைப்பை விடுத்தார்.

Liberal-NDP கட்சிகள் இடையே இருந்த அரசியல் உடன்படிக்கைக்கு இந்தச் சட்டம் மையமாக இருந்தது.

இந்த சட்டமூலத்திற்கு NDP கடுமையான அழுத்தங்களை வழங்கி வந்தது.

திருத்தங்கள் இல்லாமல் இந்த சட்டமூலம் வியாழக்கிழமை Senate சபையில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த சட்டமூலத்திற்கு அரச அனுமதி கிடைத்துள்ளது.

Related posts

Mexicoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் கனடாவில் வாகன ஊர்தி முற்றுகைப் போராட்டம்

Lankathas Pathmanathan

Liberal – NDP கூட்டணி இல்லை: Liberal நாடாளுமன்ற குழுத் தலைவர் Mark Holland!

Lankathas Pathmanathan

Leave a Comment