லெபனானில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலில் மேலும் ஒரு கனடியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் கனடியர் ஒருவர் மரணமடைந்ததாக வெளியான செய்திகளை அறிந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த நபரின் குடும்பத்தினருடன் உதவி வழங்குவதற்காக அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் தனிநபர் உரிமை சட்டங்கள் காரணமாக அந்த நபர் குறித்த விவரங்கள் எதையும் அமைச்சு வெளியிடவில்லை
இஸ்ரேலுக்கும் லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில் September பிற்பகுதியில் லெபனானில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டனர்.
லெபனானில் உள்ள கனடியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
1,050 க்கும் மேற்பட்ட கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் லெபனானை விட்டு வெளியேற உதவியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.
லெபனானில் 25,000 க்கும் மேற்பட்ட கனடியர்கள் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது.