லெபனானில் சிக்கியுள்ள கனடியர்களுக்கு தொடர்ந்து உதவி வருவதாக கனடிய அரசாங்கம் தெரிவித்தது.
லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றும் உதவிகளை கனடிய அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இஸ்ரேலுக்கும் லெபனானை தளமாகக் கொண்ட போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த உதவிகளை வழங்குவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
25,000 கனடியர்கள் தற்போது லெபனானில் இருப்பதாக நம்பப்படுகிறது.
அவர்களில் சுமார் 5,000 பேர் அங்கிருந்து வெளியேற உதவி கோரியுள்ளனர்.
இவர்களில் 2,300 க்கும் மேற்பட்டவர்களை மத்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக விமானங்களில் வெளியேற அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.