இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை கனடிய பிரதமர் கண்டித்தார்.
இந்த நிலையில் ஒரு பெரும் பிராந்திய போரை தவிர்க்க சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என Justin Trudeau வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு, கடந்த வாரத்தில் பரந்த வன்முறையாக மாறியுள்ளது
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்த G7 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் புதன்கிழமை (02) காலை உரையாடினார்.
இந்த தாக்குதல் பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது, ஒரு பரந்த போரின் அபாயத்தை ஏற்படுத்துகிறது என Trudeau கூறினார்.
இந்த தாக்குதல்களுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார்