தேசியம்
செய்திகள்

நெடுந்தெரு 407ஐ மீண்டும் கொள்வனவு செய்ய தயாராகும் Doug Ford?

நெடுந்தெரு 407ஐ மீண்டும் கொள்வனவு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

Mike Harris தலைமையிலான Progressive Conservative அரசாங்கம் 1999இல் நெடுந்தெரு 407ஐ விற்பனை செய்தது.

SNC Lavalin, Quebec மாகாண ஓய்வூதிய நிதியம்,  Spanish நிறுவனமான Ferrovial ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டமைப்புக்கு $3.1 பில்லியன் டொலர்களுக்கு நெடுந்தெரு 407விற்பனை செய்யப்பட்டது.

கனடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் இப்போது 407 நெடுந்தெருவில் 50.01 சதவீதத்தை சொந்தமாக கொண்டுள்ளது.

இந்த நெடுந்தெருவின் கிழக்குப் பகுதியில் 22 கிலோ மீட்டர் பகுதியை Ontrario மாகாணம் சொந்தமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ள நெடுந்தெரு 407 பகுதியை கொள்வனவு செய்வது குறித்து Doug Ford அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

Related posts

முன்னாள் Mississauga நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

வங்கி கொள்ளை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Ontarioவில் எட்டாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

Leave a Comment