தேசியம்
செய்திகள்

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொள்கின்றனர்.

NDP நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson, கனடிய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறார்.

கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அரசாங்கங்கள் ஏற்கனவே முன்னெடுத்த நகர்வுகளை கட்டியெழுப்புவது இரு மாநில தீர்வை முன்னெடுப்பதற்கான சிறந்த பயனாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson நம்பிக்கை தெரிவித்தார்.

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் Phil Twyford, மூன்று நாடுகளும் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான புதிய முயற்சியை முன்னெடுக்கிறார்.

ஹமாஸ், காசா, இஸ்ரேலிய பணயக்கைதிகள், மனிதாபிமான உதவிகள் குறித்த நிலைப்பாடுகளை வகுத்துள்ள கனடிய அரசாங்கம், ஆஸ்திரேலியா நியூசிலாந்துடன் மூன்று அறிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு முதலாவது முதற்குடி நபர் தெரிவு

Lankathas Pathmanathan

இரண்டாவது நாளாக Ontarioவில் 600க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் !

Gaya Raja

Leave a Comment